Skip to main content

ரசிகருடன் விளையாட்டு, ரெய்னாவுடன் சாட்டிங்... ப்ராக்டிஸ் மேட்ச்சில் ஜாலி பண்ணிய தோனி!

Published on 18/03/2019 | Edited on 18/03/2019

வருகிற 23ஆம் தேதி 2019ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் லீக் போட்டிகள் தொடங்குகின்றன. இந்த வருடத்தின் முதல் போட்டியே சென்னையில் சிஎஸ்கே மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறுவதால் இந்த போட்டிக்கு பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.
 

dhoni

 


இதனால் சிஎஸ்கே அணியின் ஸ்டார் பிளேயர்கள் அனைவரும் கடந்த சனிக்கிழமை அன்று மாலையிலிருந்தே சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியை தொடங்கி விட்டனர். பயிற்சியை பார்க்கவே ஆயிரக்கணக்கில் பார்வையாளர்கள் மைதானத்தில் கூடி, வீரர்களை உற்சாகப்படுத்தினார்கள். சிஎஸ்கே அணியின் ஸ்டார் என்றாலே முதலில் தல தோனி, இரண்டாவது சின்ன தல ரெய்னாவைதான் சொல்ல முடியும். பயிற்சிக்கு இவர்கள் இருவரும் மைதானத்தில் நுழையும்போது, அந்த மைதானமே கைதட்டல்களாலும், விசில்களாலும் நிறைந்து காணப்பட்டது. தோனி, பவுண்டரி லைனிலிருந்து பேட்டிங் ஆட செல்லும் வரை தோனி, தோனி என மைதானம் முழுவதும் ரசிகர்களின் சத்தம் எழுப்பினார்கள். இதே நிலைதான் சின்ன தல பேட்டிங் ஆட வரும்போது. தோனியை கூட நாம் இந்திய அணியில் விளையாடும்போது பார்க்கிறோம். ஆனால், ரெய்னாவை அதைபோன்று கூட பார்க்க முடிவதில்லை. எனவே ரசிகர்களுக்கு இந்த ஐபிஎல் நல்ல ட்ரீட்டாக இருக்கும் என நம்புவோம். இவர்கள் இருவரும் பேட்டிங் பயிற்சியில், நிறைய பந்துகளை பவுண்டரி லைனுக்கு வெளியே அனுப்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பேட்டிங் பயிற்சிக்கு பின்னர் சுரேஷ் ரெய்னாவும் தோனியும் மைதானத்தில் நின்றுக்கொண்டு எதைபற்றியோ பேசிக்கொண்டிருந்தனர்.

தோனியை ஒருமுறையாவது பார்த்து, கைக்கொடுத்திட வேண்டும், புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என ரசிகர்கள் நினைப்பார்கள். சிலர் அவரை கிட்டத்தட்ட கடவுளுக்கு இணையாக பார்த்து காலில் விழும் தருணங்கள் பல நடக்கின்றன. அவர் எங்கு சென்று விளையாடினாலும், ரசிகர் யாராவது ஒருவர் பல பாதுகாப்புகளையும் உடைத்துகொண்டு தோனியை பார்க்க ஓடுவார்கள். அது சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியா, இந்தியா ஒரு நாள் போட்டியிலும் நடந்தது.

அப்போதுகூட, தன்னை பார்க்க வந்த ரசிகரிடமிருந்து சிக்காமல் ஓடி பிடித்து விளையாடுவதுபோல் விளையாடினார் தோனி. இது செம வைரலானது. இதை போன்று பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் நுழைந்து ஓடிவர. லக்‌ஷ்மிபதி பாலாஜியின் பின் ஒளிந்துகொண்டு விளையாட்டு காட்டினார் தோனி. இதுபோல பயிற்சி செய்வது, பயிற்சி ஆட்டம் என்று சாதாரண விஷயங்கள் கூட சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கடந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே வென்றிருந்தது. இந்த வருடமும் நாங்கள்தான் வெல்லுவோம் என்று தைரியமாக ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.