Skip to main content

அரைமணி நேரம் கூட தாக்குப்பிடிக்காமல் இந்தியா ஆல்அவுட்!

Published on 18/12/2020 | Edited on 18/12/2020
starc

 

 

இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, நேற்று அடிலெய்ட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்தது.

 

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறிது நேரத்திலேயே ஆட்டமிழந்தாலும், கோலி - புஜாராவின் நிதானமான ஆட்டத்தால் இந்திய அணி பொறுமையாக ரன்களை சேகரித்து வந்தது. இருப்பினும் 74 ரன்களில் கோலி ரன் அவுட்டாக, ஆட்டத்தின் போக்கு மாறியது. கோலிக்கு பிறகு, மற்ற இந்திய பேட்ஸ் மேன்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், 183- 3 என்ற நிலையில் இருந்த இந்திய அணி,  முதல்நாள் ஆட்ட நேர முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 233 ரன்களை எடுத்திருந்தது.

 

இதனைத் தொடர்ந்து, இரண்டாம் நாளான இன்று களமிறங்கிய இந்திய அணி, அரை மணி நேரம் கூட தாக்கு பிடிக்கவில்லை.இந்திய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து வெளியேறியதால், இந்திய அணி மேற்கொண்டு வெறும் 11 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து. ஆஸ்திரேலியா தரப்பில், ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், நாதன் லயன் மற்றும் ஹேசல்வூட் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.