இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி, பிரிமிங்கத்தில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல்நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்திருந்தது.
தமிழகத்தைச் சேர்ந்த முரளி விஜய், தினேஷ் கார்த்திக் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகிய வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். கே.எல்.ராகுல் பெங்களூருவைச் சேர்ந்தவர் என்றாலும், அவரும் சரளமாக தமிழில் பேசக்கூடியவர். பொதுவாக இந்திய வீரர்கள் போட்டிக்களத்தில் இந்தியில் பேசிக்கொள்வது வழக்கம். ஆனால், சமயத்தில் தமிழக வீரர்கள் தமிழிலும் பேசிக் கொள்கின்றன.
இந்நிலையில், நேற்றைய போட்டியில் ரவிச்சந்திரன் அஷ்வின் அலாய்ஸ்டர் குக்கிற்கு பந்துவீசிக் கொண்டிருந்த முதல் ஓவரில், விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் ‘மேல.. மேல..’ என தமிழில் கூறினார். இதுபோல, இடையிடையே அஷ்வினை தினேஷ் கார்த்திக் ஊக்கப்படுத்திக் கொண்டேயிருந்தார். அதேபோல், 17ஆவது ஓவரில் அஷ்வின் பந்துவீச, ‘நீ வேற லெவல் மாமா! அப்படியே போடு.. தூக்கிடலாம்’ எனக்கூறினார் தினேஷ் கார்த்திக். அடுத்த பந்தில் ‘சூப்பர் மாமா.. அப்படியே போடு.. என்ன செய்கிறான்னு பார்ப்போம்’ எனவும் கூறினார்.
— Hit wicket (@sukhiaatma69) August 1, 2018
இந்த சமயத்தில் சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களால், திருவள்ளுவர் ரேஞ்சுக்கு புகழப்பட்ட ஹர்பஜன் சிங் கமெண்டேட்டராக இருந்ததுதான் ஹைலைட்டே!