இங்கிலாந்து நாட்டில் நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்கு தகுதிபெறாமலே வெளியேறியது பாகிஸ்தான் அணி.

பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையை விட்டு வெளியேறினாலும் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரராக இமாம் உல் ஹக்கின் ஆட்டம் அனைத்து பாகிஸ்தான் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது என்றே சொல்லலாம். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் நன்மதிப்பை பெற்றிருந்தார் இமாம். ஆனால் அவர் ஒருசில பெண்களுடன் சாட்டிங் செய்த ஸ்கிரீன் ஷாட்டுகள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஸ்கிரீன் ஷாட்டுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, அவரது ரசிகர்கள் அவரை கேலி செய்தும் வருகின்றனர். இந்த விவகாரம் இணையத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பாக இமாம் தரப்பிலிருந்து இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. இவர், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்ஸமாம் உல் ஹக்கின், உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.