சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் ஆட்டத்தை பொறுத்து அவர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிடும்.
அந்த வகையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் கோலி பேட்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியா அணியின் ஸ்மித் 923 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில இருக்கும் நிலையில், 928 புள்ளிகளுடன் கோலி முதல் இடத்தை பிடித்துள்ளார். அதேபோல டெஸ்ட் பந்துவீச்சார்கள் பட்டியலில் இந்திய அணியின் பும்ரா ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளார்.
டெஸ்ட் தரவரிசை...
பேட்டிங்:-
1) விராட் கோலி (இந்தியா) - 928
2) ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா) - 923
3) வில்லியம்சன் (நியூசிலாந்து) - 877
4) புஜாரா (இந்தியா)- 791
5) வார்னர் (ஆஸ்திரேலியா)-764
6) ரஹானே( இந்தியா) - 759
7)ஜோய் ரூட்( இங்கிலாந்து) - 752
8) லபுஸ்சக்னே( ஆஸ்திரேலியா) - 731
9) நிக்கோல்ஸ் ( நியூசிலாந்து) - 726
10) கருணரத்னே ( இலங்கை)- 723
பந்துவீச்சு:
1) கம்மின்ஸ் ( ஆஸ்திரேலியா)- 900 புள்ளிகள்
2) ரபடா (தென்னாப்பிரிக்கா) - 839
3) ஹோல்டர்(வெஸ்ட் இண்டீஸ்)- 830
4) வாக்னர் ( நியூசிலாந்து) - 814
5) பும்ரா( இந்தியா)- 794
6) பிலாந்தர்(தென்னாப்பிரிக்கா) - 783
7) ஆண்டர்சன் ( இங்கிலாந்து)- 782
8) ஹஸ்ல்வுட்( ஆஸ்திரேலியா) - 776
9) அஷ்வின்( இந்தியா) - 772
10) முகமது ஷமி( இந்தியா) - 771