Published on 10/10/2020 | Edited on 10/10/2020

13-வது ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தொடரின் 24-வது லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ராகுல் திரிபாதி மற்றும் கில் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிய, கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் 5-வது விக்கெட்டிற்குக் களமிறங்கினார். அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 22 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதில் 7 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடக்கம்.
கொல்கத்தா அணி 20 ஓவரின் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்கள் குவித்தது.