Skip to main content

ஐபிஎல் வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த ரெய்னா....

Published on 24/03/2019 | Edited on 24/03/2019

ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி வீரர் சுரேஷ் ரெய்னா எந்த பேட்ஸ்மேனும் அடையாத புதிய மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளார்.
 

csk raina

 

 

ஐபிஎல் லீக் போட்டிகளை பொறுத்தவரை அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் ஏழு இடங்களில் இந்திய வீரர்களே உள்ளனர். முதலிடத்தில் சுரேஷ் ரெய்னா, இரண்டாவது இடத்தில் விராத் கோலி, மூன்றாம் இடத்தில் ரோஹித் ஷர்மா ஆகியோர் இருக்கின்றனர். ஆனால், யாரும் 5000 ரன்களை கடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் 12வது ஐபிஎல் போட்டி தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கேவும் ஆர்சிபி அணிகளும் மோதியது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 17.1 ஓவர்களில் 70 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து 71 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் சிஎஸ்கே விளையாடியது. இதில் ரெய்னா 19 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர் 15 ரன்களை எட்டியபோது, ஐபிஎல் வரலாற்றில் 5000 ரன்களை எட்டிய முதல் வீரர் எனும் சாதனையை படைத்தார். இதுவரை ஐபிஎல் போட்டியில் ரெய்னா ஒரு சதம், 35 அரைசதம் அடித்துள்ளார். 
 

2-வது இடத்தில் விராட் கோலி 4948 ரன்களுடனும், 3-வது இடத்தில் ரோஹித் சர்மா 4,493 ரன்களுடன் உள்ளனர். இவர்கள் இருவரும் இந்த சீஸசனில் 5000 ரன்களை கடந்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தோனி 4,016 ரன்களும், டேவிட் வார்னர் 4014 ரன்களுடன், உத்தப்பா 4086, ஷிகர் தவண் 4,058 ரன்களுடன் உள்ளனர்.