செவ்வாழையில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து உடலுக்கு தேவையான சக்தியினை அளிக்கின்றது. ஒரு செவ்வாழை பழத்தில் 4 கிராம் அளவிற்கான நார்ச்சத்து அடங்கியுள்ளது. மேலும் இதனுடன் உடலுக்கு தேவையான பொட்டாசியம் சத்தும் அடங்கியுள்ளது. இந்த பொட்டாசியம், சிறுநீரக கல், இருதய நோய், புற்று நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களில் இருந்து நம்மை காக்கும் ஆற்றல் உடையது. உடலின் ஆரோக்கியம் மற்றும் சருமம பாதுகாப்பிற்கு செவ்வாழை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் சி சக்தி செவ்வாழை பழங்களில் மிக அதிகமாக இருக்கின்றது. மனிதனின் உடலுக்கு தினமும் தேவையான வைட்டமின் சி அளவில், 16 சதவீதம் இந்த செவ்வாழை பழங்களில் நிறைந்துள்ளது. இரத்த சோகை பிரச்சனை, இரத்த குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகளை குறைப்பதில் செவ்வாழைக்கு மிக முக்கிய பங்கு உண்டு.
சரும பொலிவு மற்றும் இளமையான முகத்தினை பெற செவ்வாழை உதவியாக இருக்கும். வைட்டமின் ஏ சத்துக்கள் செவ்வாழையில் அதிகம் காணப்படுகின்றது. இது உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கின்றது. கண் பார்வை குறைபாட்டினை போக்க செவ்வாழை மிகவும் உதவிகரமாக இருக்கும். உடலுக்கு உடனடி சக்தியினை அளிக்கும் வரபிரசாதமாக செவ்வாழை இருக்கின்றது. தினம் ஒரு செவ்வாழை பழம் சாப்பிட்டால் அவர்களின் மூளை செயல் திறன் பெரிய அளவில் அதிகரிக்கும். நகத்தில் ஏற்படும் புள்ளி போன்ற கோளாறுகளை நீக்க செவ்வாழை பழங்கள் பேருதவியாக இருக்கும்.