Skip to main content

“ராஜா மாதிரி” - கண்கலங்கிய படி விஜயகாந்த்தை நினைவு கூர்ந்த நமீதா 

Published on 10/05/2024 | Edited on 10/05/2024
namitha emotional speech about vijayakanth

கடந்த 2004  ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான நமீதா, தொடர்ந்து அஜித், விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். இதையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு வீரேந்திர சவுத்ரி என்பவரை நடிகை நமீதா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தை உள்ளது.

திரைத்துறையை விட தற்போது அரசியலில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். பி.ஜே.பி.யை ஆதரித்து தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை வாக்கு பதிவில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். இதையடுத்து தெலுங்கானா, ஆந்திர பிரதேஷ் உள்ளிட்ட மாநிலங்களிலும் பி.ஜே.பிற்காக பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிலையில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் நமீதா. இதையொட்டி சென்னை தி.நகரில் உள்ள திருப்பதி பெருமாள் கோயிலில் வழிபாடு நடத்தி, அன்னதானம் செய்தார்.

இதையடுத்து சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விஜயகாந்த் மறைந்த சமயத்தில் என்னால் இங்கு வரமுடியவில்லை. அதனால் இன்றைக்கு என்னுடைய பிறந்தநாளில் இங்கு வந்திருக்கிறேன். விஜயகாந்த் சாருடைய ஆசீர்வாதத்திற்காக வந்திருக்கேன். ஏன்னா, தமிழ்நாட்டில் எனக்கு ரசிகர்கள் உயிர கொடுக்கிறாங்க. அதற்கு காரணம் விஜயகாந்த் சார் தான். அவர்கிட்ட ரொம்ப கத்துக்கிட்டேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் ரொம்ப துறுதுறுன்னு இருக்கணும், எனர்ஜியோட இருக்கணும், நீங்களும் ட்ரை பண்ணுங்க என்றார். ட்ரை பன்ணினேன் எனக்கு வரவில்லை. அவர் எப்போதுமே ஸ்டூல் மேல்தான் உட்கருவார். நேராக... ஒரு ராஜா மாதிரி, எனக்கு அது பற்றிய மறக்கமுடியாத நினைவுகள் இருக்கிறது. அவருக்கு பத்பபூஷன் விருது கிடைச்சது, தகுதியான ஒன்று” என எமோஷ்னலாக பேசினார். 

சார்ந்த செய்திகள்