மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர் 450 கிலோ மீட்டர் நடந்து வந்து மீண்டும் பணியில் சேர்ந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் திக் விஜய சிங். இவர் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காவல் நிலைத்தில் பணிபுரிந்து வருகின்றார். சில வாரங்களுக்கு முன்பு விடுமுறை எடுத்துக்கொண்டு அவர் சொந்த ஊரான மத்திய பிரதேசம் வந்த நிலையில் கரோனா காரணமாகத் திரும்பப் பணியில் சேர முடியாமல் போனது. பேருந்து நிறுத்தப்பட்ட காரணத்தைத் தன்னுடைய உயர் அதிகாரிகளிடம் கூற, அதிகாரிகள் மேலும் விடுமுறையை நீடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால் பணியின் மேல் உள்ள ஆர்வத்தால் நடந்து சென்றாவது பணியில் சேர்ந்து விட வேண்டும் என்று நினைத்த அவர், சுமார் 450 கிலோ மீட்டர் தூரத்தை அவர் நடக்க ஆரம்பித்தார். இடையில் சில நல்ல மனிதர்கள் அவரை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார்கள். ஒரு வழியாகப் போராடிய அவர், பணியாற்றும் காவல்நிலையம் வந்தடைந்தார். அவர் பணியின் மீது வைத்திருக்கும் மரியாதையைப் பாராட்டும் விதமாக அவருக்கு உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்கள். இந்தச் செய்தி அந்த மாநிலம் முழுவதும் வைரலாகி வருகின்றது.