பாகிஸ்தானில் 44 சதவிகிதம் பெண்கள் மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அதற்கான நாப்கின் போன்ற வசதிகள் இல்லாமல் பணியாற்றும் இடங்கள் மற்றும் பள்ளி போன்ற இடங்களில் அவதிப்பட்டு வருகின்றனர். அதை கருத்தில் கொண்டு வாஸ்மா இம்ரான் மற்றும் மஹின் கான் என்ற இருவர் மாதவிலக்கிற்கு கப் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
இதைப்பற்றி வாஸ்மா கூறுகையில், "பாகிஸ்தான் பெண்கள் மாதவிலக்கு விஷயங்களில் விழிப்புணர்வு இன்றியும் அதற்கான சரியான வசதிகள் இன்றியும் பள்ளி, பணியாற்றும் இடம் என அவதிப்பட்டு வருகின்றனர், பாகிஸ்தானில் மட்டுமல்ல உலக அளவில் மாதவிலக்கு காலங்களில் பெண்கள் பள்ளிக்கு போவதில்லை இதை சுலபமாக்க நாங்கள் இந்த கப்பை உருவாக்கியுள்ளோம்" என கூறினார்.
மஹின் கான் கூறுகையில், "இங்கே மாதவிலக்கு பற்றி ஆண்களுக்கு தெரியாது அதைப்பற்றி பொது இடங்களில் பேசவும் முடியாத நிலை இன்னும் இங்குள்ளது இதையெல்லம் உடைக்கவே இந்த கப்பை உருவாக்கியுள்ளோம்."
"நாங்கள் உருவாக்கிய இந்த மாதவிடாய் கப் பெண்களின் மாதவிலக்கு பிரச்சனையை கண்டிப்பாகத் தீர்க்கும். உடலுக்கேற்ற சிலிகானில் உருவாக்கப்பட்டிருக்கும் இது வழக்கமான சானிட்டரி நாப்கின் பயன்பாட்டை விட சுலபமாகவும் சுகாதாரமாகவும் இருக்கும். ஒரு பெண் தனது ஆயுள் முழுவதுமே ஐந்து அல்லது ஆறு கப்பை உபயோகித்தால் போதும். இதனால், சுற்றுச் சூழலுக்கு கேடாக அமையும் நாப்கின் கழிவுகள் பெருமளவில் குறையும். இதை விரைவில் சந்தைப்படுத்தவும் உள்ளோம்" எனவும் கூறினார். ஏற்கனவே இது போன்றவை அறிமுகமாகியிருந்தாலும் பாகிஸ்தானில் இவர்கள் தான் இதை அறிமுகம் செய்து பெண்கள் மத்தியில் பரப்புகின்றனர்.