அலுவலகப் பணிகள், பள்ளி, கல்லூரிகளில் நீண்ட நேரம் உட்கார்ந்த இடத்திலேயே உட்கார்ந்து இருக்க வேண்டியிருக்கிறது. இதன் காரணமாக உடல் பருமன், சர்க்கரை நோய், இதய நோய்கள் அதிகரிக்கின்றன. இதிலிருந்த விடுபட கால்களால் பெடல் செய்யும் வகையிலான டெஸ்க்குகளை ஆய்வாளர்கள் பரித்துரைத்துள்ளனர்.
பணிநேரத்திலேயே கால்களுக்கும் வேலை கொடுப்பதால் இன்சுலின் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது என்கிறார்கள். மதிய உணவுக்குப் பிறகு சாதராண டெஸ்க்குகளில் அமர்ந்து வேலை செய்கிறவர்களைக் காட்டிலும், இந்த பெடல் டெஸ்க்குகளில் வேலை செய்கிறவர்களுக்கு இன்சுலின் அதிகமாக சுரப்பதாக தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி, பெடல் செய்வதால் வேலையும் சுறுசுறுப்பாக நடைபெறும் என்கிறார்கள்.
உடல் உழைப்புத் தேவைப்படாத இடங்களில் பணிபுரிபவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க இந்தப் பெடல் டெஸ்க்குகள் பெரிதும் உதவுவதாக ஆய்வு முடிவுகள் உறுதி அளித்துள்ளன.