தங்களுடைய சிகிச்சையின் மூலம் மன நோயாளிகள், போதைக்கு அடிமையானவர்கள் போன்றோரை எவ்வாறு மீட்கிறோம் என்பதை விளக்குகிறார் திருவண்ணாமலையில் இயங்கி வரும் பாத சிகிச்சை நிபுணர் ஆல்பா சுதாகர்.
பொதுவாக மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு ஆறுதலாகப் பேசும் நபர்களைத் தேடுவார்கள். அமாவாசை போன்ற நேரங்களில் தான் அவர்களின் வேகம் அதிகரிக்கும். மற்ற நேரங்களில் குழந்தைகள் போன்று தான் இருப்பார்கள். சில நோயாளிகள் மட்டும் தான் ஆக்ரோஷமாக இருப்பார்கள். அவர்கள் தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்வார்கள் அல்லது மற்றவர்களைக் காயப்படுத்துவார்கள். அவர்களுக்கும் மனநல மருத்துவரின் மூலம் மருத்துவம் செய்கிறோம். போதைப்பழக்கம் உள்ளவர்கள் அது தங்களுக்கு மரணத்தைத் தான் தரும் என்பதையும் அறிந்தே செய்கிறார்கள். இது பழக்கம் கிடையாது. ஒரு நோய். நோயிலிருந்து விடுபட வேண்டும் என்றால் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். சிகிச்சை எடுத்த பிறகு மீண்டும் பழைய இடத்திற்கு அவர்கள் செல்லும்போது பழைய ஞாபகங்களில் மீண்டும் அந்தப் பழக்கங்களைத் தொடர்கிறார்கள். போதை வெறியில் இருக்கும்போது அவர்களின் மூளை வேகமாக வேலை செய்யும்.
உங்களுடைய அறிவு, திறமை அனைத்தும் போதை உணர்வால் களவாடப்படுகின்றது. போதை வஸ்துக்கள் அனைத்தும் நரம்பு மண்டலத்தை நேரடியாக பாதிக்கக் கூடியவை. இதைத் தடுக்கக் கடுமையான சட்டங்கள் தேவை. பிரச்சனைகளை சந்திக்க தைரியம் இல்லாதவர்கள் தான் பெரும்பாலும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். முறையான வைத்தியம் தான் அவர்களைக் காக்கும். சினிமாத் துறையைச் சார்ந்த பலரும் நம்மிடம் சிகிச்சை எடுத்திருக்கின்றனர். மாதம் ஒரு நாள் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று மக்களுக்கு இலவச மருத்துவம் வழங்குகிறோம். இதன் மூலம் பாத சிகிச்சை குறித்த விழிப்புணர்வை அவர்களுக்கு ஏற்படுத்துகிறோம். தங்களுடைய பிரச்சனைகளை யாரிடமும் வெளிப்படுத்தத் தயங்கும் பெண்கள் நம்மிடம் பகிர்ந்து கொள்கின்றனர். வாரம் ஒரு நாள் நம்முடைய மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாமும் நடத்துகிறோம்.
உணவை நன்றாக மென்று சாப்பிடுபவர்களுக்குப் பெரும்பாலும் நோய்கள் வராது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பசியறிந்து உண்ண வேண்டும். உணவு நன்றாக செரிமானமாக வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும். அப்போதுதான் எதிர்காலத் தலைமுறை வீரியமாக இருக்கும். துரித உணவுகளை தயவுசெய்து தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு பாத சிகிச்சை குறித்த புரிதல் இருந்தால் குடும்பத்தில் யாரும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.