Skip to main content

தினசரி ராசிபலன்- 10.07.2022

Published on 10/07/2022 | Edited on 10/07/2022

மிதுனம்
இன்று வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்து நல்ல லாபத்தை அடைவீர்கள். நண்பர்களின் உதவி கிட்டும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

kadagam

கடகம்
இன்று நீங்கள் எடுக்கும் காரியங்களில் தடை தாமதங்கள் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். எந்த ஒரு விஷயத்திலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப் பலனை அடைய முடியும். சகோதர சகோதரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும்.

5

சிம்மம்
இன்று உங்களுக்கு உடல் சோர்வால் செய்யும் செயல்களில் தாமதம் உண்டாகும். வண்டி வாகனங்களால் சிறு சிறு விரயங்கள் ஏற்படும். சொத்து சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடியும். தொழில் ரீதியான பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலப் பலன் கிட்டும்.

kannirasi

கன்னி
இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.தொழிலில் அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் நற்பலன் கிடைக்கும். வம்பு வழக்கு போன்ற விஷயங்களில் சாதகப் பலன் கிட்டும். திடீர் பணவரவுகள் மகிழ்ச்சியை அளிக்கும்.


thulam

துலாம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பெரியவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் தோன்றும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.

viruchagam

விருச்சிகம்
இன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளால் உங்கள் மதிப்பு கூடும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும்.

danush

தனுசு
இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை இருக்கும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

magaram

மகரம்
இன்று குடும்பத்தில் பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உங்களுக்கிருந்த நெருக்கடிகள் விலகி மன நிம்மதி ஏற்படும். பெண்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

kumbam

கும்பம்
இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். வியாபார ரீதியாக வெளிமாநில நபர்கள் மூலம் அனுகூலப்பலன்கள் பெறுவர். கடன் பிரச்சினைகள் சற்று குறையும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். சுப காரிய முயற்சிகளில் சாதகப் பலன் கிடைக்கும்.

meenam

மீனம்
இன்று நீங்கள் சிறு மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். உறவினர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். பண விஷயத்தில் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.