அண்மையில் பாகிஸ்தானில் நடைபெற்ற தேர்தலுக்கு பிறகு தேர்தலில் வெற்றிபெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரரும் தெஹ்ரிக் - இ - இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான் கடந்த 18 தேதி பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். ஆட்சிக்கு வந்த உடனே சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் இம்ரான் கான் அரசு பாகிஸ்தான் நிர்வாகத்தை செவ்வனே நடத்த 9 பில்லியன் டாலர் தேவைப்படுகிறது என அறிவித்ததை அடுத்து சிக்கனத்தை மேற்கொள்ளும் வகையில் பாகிஸ்தானில் பிரதமர் பயன்பாட்டிற்கு வைத்திருக்கும் சொகுசு கார்களை ஏலம் விட திட்டமிட்டுள்ளார் இம்ரான் கான்.
முதல்கட்டமாக இனி அரசு ஒதுக்கியுள்ள பிரதமர் பங்களாவில் தான் தங்க போவதில்லை என்று முடிவெடுத்த இம்ரான்கான் தற்போது எனக்கு இரண்டு கார்கள், இரண்டு வேலையாட்கள் போதும் என முடிவெடுத்து பிரதமர் பயன்பாட்டிற்காக இருந்த 8 பி.எம்.டபிள்யு கார்கள், 4 பென்ஸ் கார்கள், குண்டு துளைக்காத லேண்ட் க்ரூஸர் கார்களை வரும் 17-ஆம் தேதி அகமதாபாத்தில் ஏலமிட ஏற்பாடு செய்துள்ளார்.