Published on 08/01/2019 | Edited on 08/01/2019
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோர் நேற்று தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையின் போது, ஆப்கானிஸ்தான் நாட்டின் பாதுகாப்பு,வளர்ச்சி பணிகள், இந்தியாவுடனான அமெரிக்க வர்த்தகத்தை ஒழுங்குபடுத்துவது, மற்றும் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை பலப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர் என வெள்ளை மாளிகை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரு நாட்டு தலைவர்களும் தங்கள் புத்தாண்டு வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டதாகவும், 2019- ஆம் ஆண்டிலும் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றி தங்களுக்கிடையேயான உறவை மேலும் பலப்படுத்த திட்டமிட்டுள்ளனர் எனவும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.