Skip to main content

"வேணும்னா என்னைக் கைது பண்ணுங்க"... ஊரடங்கை மீறி எலன் மஸ்க் செய்த செயல்...

Published on 13/05/2020 | Edited on 13/05/2020

 

tesla reopened amid corona lockdown

 

அமெரிக்காவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்னும் தளர்த்தப்படாத நிலையில், அரசின் சட்டத்தை மீறி தனது 'டெஸ்லா' வாகனம் தயாரிப்பு நிறுவனத்தில் உற்பத்தியைத் தொடங்கியுள்ளார் எலன் மஸ்க். 


அமெரிக்காவில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில், இதனை உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும் எனக் கூறி ஒருசில அமெரிக்கர்கள் போராடி வருகின்றனர். இந்த விவகாரத்தில் எலன் மஸ்க் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாகக் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். மேலும், தொழிற்சாலையைத் திறக்க அனுமதிக்காவிட்டால் தனது நிறுவனத் தலைமையகத்தைக் கலிபோர்னியாவிலிருந்து வேறு நகரத்திற்கு மாற்றப்போவதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் டெஸ்லா தனது வாகனம் உற்பத்தி தொழிற்சாலையைக் கலிபோர்னியாவில் மீண்டும் திறந்துள்ளது.

இது அந்நாட்டுச் சட்டத்திற்கு எதிரானது எனக் கருத்துகள் எழுந்துவரும் நிலையில், எலன் மஸ்க் இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில், "அலமேடா மாகாணத்தின் விதிகளை மீறி 'டெஸ்லா' இன்று மீண்டும் உற்பத்தியை ஆரம்பிக்கிறது. அங்கு மற்றவர்களுடன் நானும் இருப்பேன். யாரையாவது கைது செய்ய வேண்டுமென்றால் என்னை மட்டும் கைது செய்யுங்கள்" எனத் தெரிவித்துள்ளார். வாகனத் தயாரிப்பு நிறுவனங்களை மீண்டும் உற்பத்தியைத் தொடங்குவதைத் தடுக்கும் உத்தரவை நீக்குமாறு 'டெஸ்லா' ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்