உலகப்புகழ் பெற்ற பாடகர் மைக்கல் ஜாக்சனின் சாதனை ஒன்றை அமெரிக்க பாப் இசை பாடகியான டைலர் ஸ்விப்ட் முறியடித்துள்ளார்.
அமெரிக்காவில் இசைக்கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படும் மிக முக்கிய விருதுகளில் ஒன்று 'அமெரிக்க இசை விருதுகள்'. கடந்த 45 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் இந்த விருது வழங்கும் நிகழ்வில், அதிக விருதுகளை பெற்ற நபர் என்ற சாதனையை டைலர் ஸ்விப்ட் படைத்துள்ளார். இதற்கு முன் மைக்கல் ஜாக்சன் 24 விருதுகளை பெற்றதே ஒருவரின் தனிப்பட்ட அதிகபட்ச விருது எண்ணிக்கையாக இருந்தது. இதனை நேற்று லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழாவில் டைலர் ஸ்விப்ட் முறியடித்தார். இதற்கு முன்பு வரை 23 விருதுகளை வென்றிருந்த டைலர் ஸ்விப்ட் நேற்றைய விழாவில் வெவ்வேறு பிரிவுகளில் 6 விருதுகளை தட்டிச்சென்றார். இதன்மூலம் 29 அமெரிக்க இசை விருதுகளை வென்ற முதல் நபர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.