Published on 16/01/2020 | Edited on 16/01/2020
இலங்கையில் சீதா தேவிக்கு கோயில் கட்ட இலங்கையின் மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையின் மத்திய பிரதேச நுவரெலியா மாவட்டத்தில் ஏற்கனவே சீதை அம்மன் கோயில் அமைந்துள்ளது. நுவரெலியா மலைப்பகுதியில் அசோகவனம் அமைந்திருக்கிறது. அந்த வனம் முழுக்க அசோக மரம் நிறைந்து காணப்படுகிறது. இங்குதான் ராவணனால் புஷ்பக விமானம் மூலம் தூக்கி வரப்பட்ட சீதா தேவி சிறை வைக்கப்பட்டாள். அசோக வனத்தில், அசோக மரத்தின் அடியில் சீதா தேவி தங்கியிருந்ததாகச் சொல்லப்படும் இடத்தில் சீதை தேவிக்கென்றே பிரத்தியேகமாகக் கோயில் கட்டியிருக்கிறார்கள். இலங்கையிலிருந்து மட்டுமல்லாமல் வெளிநாட்டவரும் சீதை அம்மனை வணங்கி செல்கிறார்கள்.