Skip to main content

கடலில் கவிழ்ந்த கப்பல் - ஆயிரக்கணக்கான ஆடுகள் பலி?

Published on 25/11/2019 | Edited on 26/11/2019

ருமேனியாவின் தென் கிழக்கு பகுதியில் கருங்கடலில் உள்ள மிடியா துறைமுகத்தில் இருந்து தி குயின் ஹிந்த் என்ற சரக்கு கப்பல் புறப்பட்டு சென்றது.14 ஆயிரத்துக்கும் அதிகமான ஆடுகளை ஏற்றி சென்ற இந்த கப்பலில் சிரியாவை சேர்ந்த மாலுமிகள் 22 பேர் இருந்தனர். புறப்பட்ட சிறிது நேரத்திலேயே திடீரென கப்பல் கடலில் கவிழ்ந்தது. இதில் கப்பலில் இருந்த மாலுமிகளுடன் அனைத்து ஆடுகளும் நீரில் மூழ்கின. இதையடுத்து, உள்ளூர் போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் கடலோர காவல்படையினர் ஆகியோரை கொண்ட கூட்டு மீட்பு குழு தீவிர மீட்பு பணியில் இறங்கியது.



மாலுமிகள் 22 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அருகிலுள்ள மற்றொரு கப்பலை சுற்றி நீந்திக்கொண்டிருந்த 32 ஆடுகளை மீட்பு குழுவினர் மீட்டனர். பெரும்பாலான ஆடுகள் கடலில் மூழ்கியிருக்கும் என்று கருதப்படுகிறது. எனினும், தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. கப்பல் கவிழ்ந்ததற்கு என்ன காரணம் என்று இன்னும் தெரியவில்லை என்றும், ஆடுகளையும், கப்பலையும் மீட்கும் நடவடிக்கை முடிந்ததும் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

சார்ந்த செய்திகள்