Published on 01/05/2018 | Edited on 02/05/2018
எதற்கு தான் சாதனைகள் இல்லை என்ற அளவுக்கு எல்லா உயிர்களும் எதோ ஒரு வகையில் சாதனைகள் படைத்து வருகின்றன. அப்படியாக மெக்சிகோவில் 'டிரான்டுலா' என்ற சிலந்திப் பூச்சி 22 ஆண்டுகள் உயிருடன் இருந்து சாதனை படைத்தது.
இதைத்தொடர்ந்து 'வைல்டு டிராப்டோர்' என்ற மற்றொரு வகை சிலந்தி அதையும் தாண்டி 43 ஆண்டுகள் வாழ்ந்து 'டிரான்டுலா' சிலந்தி செய்த சாதனையை முறியடித்தது. கடந்த 1974ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள வீட் பெல்ட் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த சிலந்தியை ஆய்வாளர் பார்பரபி கொண்டுவந்து ஆய்வகத்தில் வைத்து பராமரித்து வந்தார்.
இந்தநிலையில் இத்தனை காலம் வாழ்ந்து வந்த 'வைல்டு டிராப்டோர்' சிலந்திப் பூச்சி தனது 43வது வயதில் மரணம் அடைந்ததாக ஆஸ்திரேலியாவின் கர்டின் பல்கலைக்கழக பூச்சியியல் துறை பேராசிரியர் லிண்டா மாசன் அறிவித்துள்ளார்.