சவுதி அரசர் சல்மான் பின் அப்துல்ஸீஸ் உடல்நலக் குறைவு காரணமாக ரியாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல்ஸீஸ் பித்தப்பை வீக்கத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 2015 ஆம் ஆண்டு முதல் சவுதி நாட்டை ஆட்சிசெய்து வரும் 84 வயதான மன்னர் சல்மான், சவுதி தலைநகர் ரியாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாத்தின் புனிதத் தளங்களின் பாதுகாவலராகக் கூறப்படும் மன்னர் சல்மான், சவுதி பட்டத்து இளவரசராகவும், துணைப் பிரதமராகவும் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக 2012 ஜூன் முதல் பணியாற்றி, பின்னர் அரசராகப் பொறுப்பேற்றார். அவர் ரியாத் பிராந்தியத்தின் ஆளுநராக 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.