உக்ரைனுடன் போர் புரிய விரும்பவில்லை என்றும், பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனி அதிபருடனான சந்திப்புக்குப் பிறகு இதனை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறினார். மேலும், அமெரிக்கா மற்றும் நேட்டோ அடைப்புடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக, எந்த சமரசமும் செய்ய முடியாது என்றார். நாட்டின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு இந்த முடிவை எட்டியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், ஒரு போதும் ரஷ்யாவிற்குப் போரைத் தொடங்கும் எண்ணமில்லை எனத் தெரிவித்தார். அதேநேரம், சோவியத் நாடுகளை நேட்டோ படைகளில் சேர்க்கக்கூடாது என்ற தங்களது அறிவுறுத்தலுக்கு மேற்குலக நாடுகள் செவிசாய்க்காததே இதற்கு காரணம் எனவும் கூறியுள்ளார். ரஷ்ய அதிபரின் அறிவிப்பு மற்றும் ரஷ்ய படைகள் உக்ரைன் எல்லைப் பகுதியிலிருந்து பின்வாங்கியுள்ளது ஆகியவை உலக நாடுகளிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளன.