Skip to main content

ஐந்து நிமிடத்தில் அமெரிக்காவை தாக்கி அழிப்போம்- ரஷ்யா...

Published on 26/02/2019 | Edited on 26/02/2019

 

dxfvdgdf

 

அணுஆயுதப் போர் ஏற்பட்டால் நாங்கள் தயாரித்து வைத்திருக்கும் ‘ஹைபர்சானிக் அணுசக்தி ஏவுகணை’ மூலம் அமெரிக்க ராணுவ நிலைகளை 5 நிமிடங்களுக்குள் தாக்கி அழித்து விடுவோம் என ரஷ்யா தொலைக்காட்சி சிறப்பு சித்தி ஒன்றை ஒளிபரப்பி உள்ளது. மேலும் இந்த தாக்குதல் இலக்கில் பெண்டகன், மேரிலேண்ட் கேம்ப் டேவிட் உள்ளிட்ட அமெரிக்காவின் முக்கிய நகரங்களும் இடம்பெற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா ஐரோப்பாவில் அனுசக்தி ஏவுகணைகளை கொண்டு வந்து நிறுத்தினால் ரஷ்யா, ஐரோப்பாவில் அமெரிக்க கடல்பகுதியில் நிறுத்திவைத்துள்ள நீர்மூழ்கிக் கப்பல்களில் உள்ள ஹைபர்சானிக் அணுசக்தி ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தும் என அதிபர் புதின் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ரஷ்ய தொலைக்காட்சியின் இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு கிரெம்ளின் அதிகாரிகளிடம் கேட்ட போது, அரசு தொலைக்காட்சி எடிட்டோரியல்களில் தலையிடமாட்டோம் என்று பதிலளித்துள்ளனர். புல்வாமா தாக்குதல்  காரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் நிலவி வரும் நிலையில் அமெரிக்கா, ரஷ்யா வின் இந்த மோதல் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்