Skip to main content

கல்லூரி வளாகத்துக்குள் துப்பாக்கிச்சூடு - ரஷ்யாவில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம்!

Published on 14/11/2019 | Edited on 14/11/2019


ரஷ்யாவின் பிளாகோவெஷ் சென்ஸ்க் நகரில் உள்ள தொழில்நுட்ப கல்லூரியில் படித்து வரும் 19 வயதான மாணவர், வேட்டைக்கு பயன்படுத்தும் துப்பாக்கியை பயன்படுத்தி இன்று சக மாணவரை சுட்டுக்கொண்டு தானும் தற்கொலைக்கு முயன்றார்.



இதில் உடன் பயின்ற மாணவர் உயிரிழந்ததோடு, மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில்,  மாணவர் எதற்காக இந்த தாக்குதலை நடத்தினார் என்ற விவரம் தெரியவில்லை. இதுதொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதே கந்தர்வக்கோட்டை சம்பவம்; அச்சத்தில் தாம்பரம்

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
The same Kandaravakot incident; Tambaram in fear

சென்னையை அடுத்துள்ள தாம்பரத்தில் நேற்று வழக்கறிஞர் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த மீனாம்பாள் தெருவில் தியாகராஜர் என்பவர் வசித்து வருகிறார். இவர் வழக்கறிஞர் ஆவார். நேற்று வழக்கம்போல் வழக்கறிஞர் தனது மனைவி, மகனுடன் வீட்டில் இருந்துள்ளார். அப்பொழுது திடீரென வீட்டுக்குள் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. அப்போது ஜன்னல் வழியாக வந்து பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் அந்த பகுதியில் இருந்து ஓடிச் சென்றது தெரிந்தது.

வீட்டிற்குள் துப்பாக்கி குண்டு ஒன்று விழுந்து கிடந்தது. அந்த குண்டை பார்த்து அவர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு சென்றிருக்கலாம் என அச்சமடைந்து உடனடியாக தாம்பரம் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். தகவல் அடிப்படையில் அங்கு வந்த போலீசார், வீட்டுக்குள் ஜன்னலை துளைத்து உள்ளே வந்த துப்பாக்கி குண்டை கைப்பற்றி ஆய்வு செய்தனர். ஆய்வில் அது எஸ்.எல்.ஆர் சிறிய ரக துப்பாக்கியில் இருந்து வந்த குண்டு எனத் தெரியவந்தது.

போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் அருகிலேயே ஒரு துப்பாக்கிச் சுடும் பயிற்சி தளம் இருப்பதாகவும் அங்கிருந்து தோட்டாக்கள் பறந்து வந்திருக்கலாம் என்ற கோணத்தில் இப்பொழுது விசாரணையை போலீசார் மாற்றி உள்ளனர். அதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள இடங்களை ஆய்வு செய்ததில் ஏழு இடங்களில் இதேபோல சிறிய துப்பாக்கி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது. அண்மையில் விமானப்படை பயிற்சிக்காக வந்த நபர்கள் துப்பாக்கிச் சூடு பயிற்சியில் ஈடுபட்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களை அச்சத்திற்கு உள்ளாகியுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நார்த்தாமலை பகுதியில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் இருந்து பாய்ந்த குண்டு, வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுவனின் மூளையை துளைத்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

கூச்சலிட்டதால் உயிர் பிழைத்த பயணிகள்; ரயிலில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் திடுக் தகவல்

Published on 17/08/2023 | Edited on 17/08/2023

 

Passengers survived by shouting; incident on the train

 

அண்மையில் மும்பை ஜெய்ப்பூர் ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் சேத்தன் என்பவர் பயணிகள் நான்கு பேரை சுட்டுக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் பலரை அவர் கொல்ல முயன்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

ரயிலில் துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற சேத்தன் பல பேரை சுட முயன்றுள்ளார். அப்போது அங்கிருந்து பயணிகள் ஒன்றாக சேர்ந்து கூச்சலிட்டுள்ளனர். உடனடியாக அதிகாரிகள் அங்கு வந்ததாகத் தெரியவந்துள்ளது. முன்னதாக புர்கா அணிந்த ஒரு பெண்ணை நோக்கி துப்பாக்கியை சேத்தன் நீட்டிய போது சக பயணிகள் உடனடியாக கூச்சலிட்டனர். அதனால் அந்த பாதுகாப்புப் படை அதிகாரி சேத்தன் அங்கிருந்து சென்று விட்டார். துப்பாக்கி தோட்டாக்கள் தீர்ந்துவிட்டது என ரயிலில் இருந்த பயணிகள் நினைத்த நிலையில், திடீரென ரயிலை விட்டு இறங்கும் முன்பு சேத்தன் கையில் வைத்திருந்த  துப்பாக்கியால் பல ரவுண்டுகள் சுட்டுள்ளார். உடனே பயணிகள் கூச்சலிட்டதால்  அவர் சுடுவதை நிறுத்தியுள்ளார். அதில் நான்கு பேர் உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒருவேளை பயத்தில் உறைந்து பயணிகள் கூச்சல் போடாமல் இருந்தால் இந்த துப்பாக்கி சூட்டில் பலர் இறந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.