Skip to main content

கனடா அமைச்சரவையில் முதல் தமிழ்ப்பெண்

Published on 22/11/2019 | Edited on 22/11/2019

கனடாவில் சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையில், முதன் முதலாக தமிழ்ப் பெண் ஒருவர் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் டொரன்டோ பல்கலைக்கழகத்தில் சட்டப் பேராசிரியாக பணிபுரிந்தவர். கனடாவின் நோவா ஸ்கோடியா மாகாணத்தில் உள்ள கென்ட்வில் நகரில் பிறந்தவர்.
 

gh



தமிழகத்தில் உள்ள வேலூரைத் தனது பூர்வீகமாகக் கொண்ட அனிதா ஆனந்த்தின் தந்தை ஒரு டாக்டர். இவரது இயற்பெயர் சுந்தரம் விவேகானந்தன். அனிதாவின் தாயார் சரோஜ் ராம், பஞ்சாப் அமிர்தரஸைச் சேர்ந்தவர். தற்போது கனடாவின் பொதுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் அனிதா நான்கு குழந்தைகளுக்கு தாய் என்பது குறிப்பிடத்தக்கது.
 

சார்ந்த செய்திகள்