இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இத்தாலி நாட்டில் நடைபெற்ற 16வது ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட ஜி20 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்ட இந்த மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பருவநிலை மாற்றம், கரோனா பெருந்தொற்று, கரோனா தடுப்பூசிகள் உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், பெருநிறுவனங்களின் லாபத்தில் குறைந்தபட்சம் 15 சதவீதம் வரி விதிக்கும் ஒப்பந்தம் ஒன்றுக்கு ஜி20 நாடுகளின் தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
WATCH: Some of the visiting G20 leaders threw coins into the Trevi Fountain in Rome. Tradition has it that if you toss a coin into the fountain, you’ll return to the city pic.twitter.com/4cULeq4Im9
— Reuters Asia (@ReutersAsia) November 1, 2021
இந்த ஜி20 மாநாட்டைத் தொடர்ந்து பருவநிலை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி, ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகருக்குச் சென்றுள்ளார். முன்னதாக இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ட்ரெவி நீரூற்றில் ஜி20 மாநாட்டில் பங்கேற்ற சில உலக தலைவர்கள் நாணயங்களை வீசினர். ட்ரெவி நீரூற்றில் நாணயங்களை வீசினால், நாணயங்களை வீசியவர்கள் அந்த நகருக்கு மீண்டும் வருவார்கள் என்பது ரோம் நகரின் நம்பிக்கையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.