Father's crazy act for Daughter posts video on TikTok in pakistan

பாகிஸ்தானில் உள்ள குவெட்டா பகுதியைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அமெரிக்காவில் படித்து வந்துள்ளார். இந்த நிலையில், சிறுமி அமெரிக்காவில் இருந்து தனது குடும்பத்தினருடன் கடந்த 15ஆம் தேதி பாகிஸ்தான் வந்தார்.

Advertisment

டிக்டாக் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து வீடியோ போடும் பழக்கம் கொண்ட சிறுமியை, அவரது தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால், தந்தையின் எச்சரிக்கையை மீறி சிறுமி டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டார். இதில் ஆத்திரமடைந்த தந்தையும், சிறுமியின் மாமாவும் சேர்ந்து சிறுமியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர்.

Advertisment

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பாகிஸ்தான் போலீசார், சிறுமியின் தந்தையையும் உறவினரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.நீதிபதியின் உத்தரவுபடி அவர்கள் இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர். டிக்டாக்கில் வீடியோ போட்டதால் மகளை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.