Published on 03/04/2019 | Edited on 03/04/2019
இத்தாலியின் வடகிழக்கு கடல் பகுதியில் ராட்ஷச திமிங்கலம் ஒன்று வயிற்றில் 22 கிலோ பிளாஸ்டிக் உடன் உயிரிழந்து கரை ஒதுங்கியது. இறந்த நிலையில் கரை ஒதுங்கிய 6 மீட்டர் நீளமுள்ள குட்டி திமிங்கலத்தை அங்குள்ள மருத்துவர்கள் பார்த்துள்ளனர்.

அதன் பின் கடல் வாழ் உயிரின ஆர்வலர்கள்மற்று மருத்துவர்கள் அங்கு வந்து திமிங்கலத்தை அப்புறப்படுத்தியுள்ளனர். அப்போது அந்த திமிங்கலத்தின் இறப்புக்கான காரணத்தை கண்டறிய சோதனை செய்தபோது அதன் வயிற்றில் 22 கிலோ பிளாஸ்டிக் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஆழ்கடலில் உணவு என நினைத்து அதிகளவிலான பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொண்டதால் இந்த திமிங்கலம் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் சுற்றுச்சூழல் சீர்கேட்டின் அபாயத்தை உணர்த்துவதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.