
கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு பலரும் சுற்றுலாத் தலங்களுக்குப் படையெடுத்து வருகின்றனர். அதே சமயம் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோடை கால விடுமுறைக்கு வெளியூர்களுக்கு பயணம் செய்யும் பயணிகளுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
அந்த அறிவிப்பில், “தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளில், ஆன்லைன் முன்பதிவு திட்டத்தின் வழியாக முன்பதிவு செய்யும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. அதாவது இணைய வழியில் பயணச்சீட்டு முன்பதிவு செய்து, 01/04/2025 முதல் 15/06/2025 வரை பயணம் மேற்கொள்ளும் பயணிகளில், 75 பயணிகளை கணினி சிறப்பு குலுக்கல் முறையில் தேர்வு செய்து சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். அதன்படி முதல் பரிசாக 25 நபர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழப்பேருந்துகளில், முன்பதிவு வசதியுள்ள அனைத்து வகை பேருந்துகளிலும் முன்பதிவு செய்து ஒரு வருடத்திற்கு 20 முறை இலவச பயணம் (01/07/2025 முதல் 30/06/2026 வரை) மேற்கொள்ளலாம். இரண்டாம் பரிசாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழப்பேருந்துகளில், முன்பதிவு வசதியுள்ள அனைத்து வகை பேருந்துகளிலும் முன்பதிவு செய்து ஒரு வருடத்திற்கு 10 முறை இலவச பயணம் (01/07/2025 முதல் 30/06/2026 ) மேற்கொள்ளலாம்.
மூன்றாம் பரிசாக மூன்றாம் பரிசு 25 நபர்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழப்பேருந்துகளில், முன்பதிவு வசதியுள்ள அனைத்து வகை பேருந்துகளிலும் முன்பதிவு செய்து ஒரு வருடத்திற்கு 5 முறை இலவச பயணம் (01/07/2025 முதல் 30/06/2026 ) மேற்கொள்ளலாம். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் ஆன்லைன் முன்பதிவு திட்டத்தில் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளுங்கள். நீங்களும் போட்டியின் வெற்றியாளர்களில் ஒருவராக இருக்கலாம். முன்பதிவு செய்ய www.tnstc.in மற்றும் TNSTC அதிகாரபூர்வ மொபைல் செயலியை பயன்படுத்தவும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.