Skip to main content

இரண்டு மாதங்களுக்கு பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்காது...?

Published on 11/03/2019 | Edited on 11/03/2019

பெட்ரோல் விலையைக் குறைக்க சவுதியிடம் உதவி கோரப்பட்டுள்ளதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.

 

crude oil

 

அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தகப் போர் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரிப்பால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் மார்ச் 10-ம் தேதி சவுதி பெட்ரோலியத்துறை அமைச்சர் காலித் அல் ஃபாலியை இந்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், சந்தித்து பேசினார்.
 

இதனை தொடர்ந்து இந்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது ட்விட்டர் பக்கத்தில், பெட்ரோல் விலையைக் குறைப்பதற்கு உதவ வேண்டுமெனவும், கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டதாக ட்வீட் செய்துள்ளார்.
 

சவுதி எண்ணெய் உற்பத்தியில் முன்னணியில் இருப்பதால், கச்சா எண்ணெய் விலை தொடர்பான முடிவுகளை எடுப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதாக இருக்கிறது. எனவே, கச்சா எண்ணெய் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். 
 

வரும் ஏப்ரல் முதல் மே மாதம் வரை நாடாளுமன்றத் தேர்தல் நடக்கிவிருப்பதால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும். அதனாலேயே இவ்வாறு பேச்சுவார்த்தை நடந்திருக்குமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
 

அதற்கு உதாரணமாக கடந்த வருடம் மே மாதம் கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. அப்போது தொடர்ந்து கிட்டத்தட்ட 15 தினங்கள் பெட்ரோல் டீசல் விலை குறைந்தது. அது மட்டுமின்றி மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநில் தேர்தலின்போதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்