மத்திய ஆப்பிரிக்கா நாடான காங்கோவின் கிழக்குப் பகுதியில் உள்ள வடக்கு கிவு மாகாணத்தின் கோமா நகரில் ஞாயிற்றுக் கிழமை இந்த விபத்து நடந்துள்ளது. விபத்துக்குள்ளான தனியாருக்குச் சொந்தமான சிறிய விமானமாகும். இரு விமானிகள் மற்றும் 17 பயணிகள் உட்பட 19 பேருடன் பயணித்துக்கொண்டிருந்தபோது விபத்து நேர்ந்திருக்கிறது.

Advertisment

கோமாவிலிருந்து 350 கி.மீ. தொலைவில் உள்ள பேனி நகருக்குக் கிளம்பிய அந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் மேப்பன்டோ என்ற இடத்தில், விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஏராளமான வீடுகள் உள்ள பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 29 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. விமானம் விழுந்ததில் இரண்டு வீடுகள் இடிந்துபோகியிருக்கின்றன. விமானம் ஓடுதளத்திலிருந்து மேலெழும்போது விமானி செய்த தவறுதான் விபத்துக்குக் காரணம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.