பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு பிரதமர் செபாப் ஷெரீஃப் அறிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானில் செபாப் ஷெரீஃப் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு பெட்ரோல், டீசல் விலை நான்கு முறை உயர்த்தப்பட்டது. இந்த நிலையில்,பாகிஸ்தானில் ரூபாய் மதிப்பில் பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 18.50- ம், டீசல் லிட்டருக்கு ரூபாய் 40.54- ம் குறைக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.
அதன்படி, பாகிஸ்தானில் ரூபாய் மதிப்பில் ஒரு லிட்டர் ரூபாய் 230.24- க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூபாய் 236- க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதே பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் 2.61 ரூபாய் இந்திய ரூபாயில் 1 ரூபாயாகும். அதன்படி, இந்திய ரூபாய் மதிப்பில் பெட்ரோல் லிட்டருக்கு 7 ரூபாயும், டீசல் 15 ரூபாயும் பாகிஸ்தானில் குறைக்கப்பட்டுள்ளது.