Skip to main content

மோடி விருது வாங்கிய அதே மேடையில் விருது வாங்கி அசத்திய 18 வயது இந்திய பெண்...

Published on 25/09/2019 | Edited on 25/09/2019

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 'தூய்மை இந்தியா' திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு 'குளோபல் கோல்கீப்பர்' விருது வழங்கப்பட்டது. இந்த விருதை உலக பணக்காரர்களில் ஒருவரும், அறக்கட்டளையின் நிறுவனருமான பில்கேட்ஸ் பிரதமருக்கு வழங்கினார்.

 

payal jangit wins change maker award in newyork

 

 

பிரதமர் மோடி விருது வாங்கிய அதே மேடையில் இந்தியாவின் ராஜஸ்தானை சேர்ந்த பாயல் ஜாங்கிட் எனும் இளம்பெண் ஒருவரும் விருது வாங்கியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தின் ஹின்ஸ்லா கிராமத்தைச் சேர்ந்த பாயல் ஜாங்கிட் தனக்கு நடைபெறவிருந்த குழந்தைத் திருமணத்தைத் தடுத்து நிறுத்தியதுடன் தனது சுற்றுவட்டாரத்தில் நடைபெறும் குழந்தைத் திருமணங்களுக்கு எதிராகப் போராடியும், அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியும் வருகிறார்.

இவர் நோபல் பரிசுவென்ற கைலாஷ் சத்யார்த்தியின் குழந்தைகள் அமைப்பின் ஹின்ஸ்லா கிராமத் தலைவராக உள்ளார். சமூக நலன் சார்ந்து இயங்கி இலக்குகளை அடையும் தனி நபர்களுக்கு வழங்கப்படும் விருதான சேஞ்ச் மேக்கர் எனும் விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்