Skip to main content

பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம்... புதிய சட்டத்தை அமல்படுத்தும் பாகிஸ்தான்...

Published on 25/11/2020 | Edited on 25/11/2020

 

pakistan to implement new laws for wrongs against women

 

 

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கான தண்டனைகளைக் கடுமையாக்க பாகிஸ்தான் அரசு முடிவெடுத்துள்ளது.

 

பாகிஸ்தான் நாட்டில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கான தண்டனைகளைக் கடுமையாக்க இம்ரான்கான் தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டு சட்டத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்நாட்டு அரசின் இந்த புதிய சட்டத்தின்படி, பாலியல் குற்றவாளிகளுக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை, மரண தண்டனை, ரசாயன ஆண்மை நீக்கத்துடன் 10 முதல் 25 ஆண்டுகள் வரை சிறை தண்டனை உள்ளிட்ட தண்டனைகளை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

கடந்த செப்டம்பர் மாதம், தனது இரு குழந்தைகளுடன் காரில் சென்றுகொண்டிருந்த பெண் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது பாகிஸ்தானில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடைபெற்றபோது பேசிய அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான், பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அல்லது ஆண்மைநீக்க தண்டனை வழங்குவதே இம்மாதிரியான சம்பவங்கள் நடப்பதைத் தடுக்கும் எனத் தெரிவித்திருந்தார். இந்த சூழலில், பாகிஸ்தானில் இந்த புதிய சட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. 

 

 

சார்ந்த செய்திகள்