/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fd_4.jpg)
கரோனா வைரஸ் பரவல் பாகிஸ்தானில் அதிகரித்து வரும் நிலையில், கரோனாவுடன் வாழப் பழகிக்கொள்ளுங்கள் என அந்நாட்டு மக்களுக்கு இம்ரான்கான் அறிவுரை வழங்கியுள்ளார்.பாகிஸ்தானில் 45,000க்கும் ஏற்பட்டோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 900 பேர் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கரோனா பரவல் குறித்துப் பேசியுள்ள அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான், "கரோனா நமக்கு இரண்டு மிகப்பெரிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது. ஒன்று, அதிகரித்துவரும் வைரஸ் பரவல். மற்றொன்று, ஊரடங்கைத் தளர்த்துவது.
தற்போது ஊரடங்கைத் தளர்த்த வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். பாகிஸ்தானில் சுமார் 2.5 கோடி தினக்கூலி தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள் பட்டினியால் அவதிப்படுகின்றனர். எனவே, ஊரடங்கு நீக்கப்படாவிட்டால் லட்சக்கணக்கான மக்கள் பட்டினியில் வாடுவர். கரோனாவுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் வரை நாம் அதனுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும். மேலை நாடுகளே இந்த சூழலை எதிர்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றன" எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)