Skip to main content

வடகொரியாவின் முக்கிய குழுவில் நுழைந்த கிம் ஜாங் உன்னின் சகோதரி!

Published on 30/09/2021 | Edited on 30/09/2021

 

kim yo jong

 

வடகொரியா நாட்டின் அதிபராக இருந்து வருபவர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங். தனது சகோதரனின் முக்கிய ஆலோசகராக இருந்து வரும்  கிம் யோ ஜாங் வட கொரியா நாட்டின் செல்வாக்கு மற்றும் அதிகாரம் மிகுந்த நபர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மேலும் வடகொரியா ஆளுங்கட்சியின் முக்கிய பொறுப்பிலும் கிம் யோ ஜாங் இருந்து வருகிறார்.

 

இந்தநிலையில் அதிபர் கிம் ஜாங் உன் தலைமையிலான மாநில விவகார ஆணையத்தின் உறுப்பினராக கிம் யோ ஜாங் நியமிக்கப்பட்டுள்ளார். வடகொரியாவின்  மாநில விவகார ஆணையம் என்பது நாட்டை ஆளுகின்ற குழுவாகும். அண்மையில் இந்த குழுவிலிருந்து சிலர் வயதின் காரணமாக ஓய்வுபெற்றனர். சிலர் வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்டனர். இதனையடுத்து தற்போது புதிதாக 8 பேர் இந்த ஆட்சிக்குழுவின் உறுப்பினர்களாக  நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த 8 பேரில் ஒருவராக கிம் யோ ஜாங் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதிபர் கிம் ஜாங் உன்னிற்கு பிறகு கிம் யோ ஜாங் வடகொரியாவின் அதிபராகலாம் எனக் கருதப்படுவதால், அவர் ஆட்சிக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்