Published on 22/12/2020 | Edited on 22/12/2020
![antarctica](http://image.nakkheeran.in/cdn/farfuture/mvy0TQFwhkQZDuqw-DOWu4cieIyXclfmeAKk7LUqDzs/1608635717/sites/default/files/inline-images/antartica-im.jpg)
உலகையே ஆட்டிப்படைத்து வரும் கரோனா தொற்று, இதுவரை அண்டார்டிகா கண்டத்தை மட்டுமே விட்டுவைத்திருந்தது. மிகக் குறைந்த அளவிலான மனித நடமாட்டமே அதற்குக் காரணம்.
இந்தநிலையில், கரோனா தற்போது அண்டார்டிகாவிலும் நுழைந்துள்ளது. அண்டார்டிகா கண்டத்தில் அமைந்திருக்கும் சிலி நாட்டு ஆராய்ச்சிக்கூடத்தில், 26 சிலி ராணுவ வீரர்களுக்கும், 10 ஆராய்ச்சி நிலையப் பராமரிப்பாளர்களுக்கும் என மொத்தம் 36 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கரோனா தொற்று ஏற்பட்டுள்ள 36 பேரும், சிலி நாட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் நன்றாக இருக்கிறார்கள் என அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.