Published on 18/08/2020 | Edited on 18/08/2020

வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. அமெரிக்காவின் குடியரசு கட்சிக்கும், ஜனநாய கட்சிக்கும் இடையே அதிகாரத்தைப் பிடிப்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது. குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஜோ பைடன் போட்டியிட இருக்கிறார்.
இந்நிலையில் ஜோ பைடனுக்கு ஆதரவாகப் பேசிய ஒபாமாவின் மனைவியான மிச்சேல் ஒபாமா, "அதிபர் பதவிக்கு ட்ரம்ப் தகுதியற்றவர். நெருக்கடியான நிலையில் ட்ரம்ப் சிறப்பாகச் செயல்படவில்லை. இங்கு நிலவும் குழப்பங்களையும், பிரச்சனைகளையும் முடிவுக்குக் கொண்டு வர நீங்கள் விரும்பினால் உங்கள் வாக்கை ஜோ பைடனுக்குச் செலுத்துங்கள்" என்றார்.
ஜோ பைடன் ஒபாமா அதிபராக இருக்கும் போது துணை அதிபராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.