Skip to main content

இறந்தும் விடாத கணவன்; மருத்துவமனைக்கே சென்று மனைவியை மீண்டும் கத்திரிக்கோலால் குத்திய கொடூரம் 

Published on 04/05/2025 | Edited on 04/05/2025
nb

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா பள்ளிகொண்டா அடுத்த கீழ் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி ரவிக்குமார் (30). இவருக்கும் ஒதியத்தூர் பகுதியைச் சேர்ந்த விஜயசாந்தி (25) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு முதல் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில்  மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் மயங்கி விழுந்த மனைவியை பள்ளிகொண்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் அங்கு மருத்துவர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இருப்பினும் ஆத்திர மடங்காத கணவர் மருத்துவமனை வளாகத்தில் இருந்து கத்திரிக்கோலை எடுத்து மீண்டும் பெண்ணை குத்தியுள்ளார். இதை சற்றும் எதிர்பாராத மருத்துவர்கள் அங்கிருந்து பதறியடித்து ஓடி உள்ளனர். தகவலறிந்து வந்த பள்ளிகொண்டா காவல்துறையினர் ரவிக்குமாரை கைது செய்து அழைத்துச் சென்றனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்