Skip to main content

'மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும்‘மென்டூ’இயக்கம்

Published on 15/05/2019 | Edited on 15/05/2019

அண்மையில் MEE TOO இயக்கம் பிரபலமாகி ஆண்களுக்கு எதிராக பெண்கள் பாலியல் புகார்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், ஆண்கள் தங்களுக்கு நிகழும் பாலியல் தொல்லைகளை புகார்களாக தெரிவிக்க இந்தி நடிகர் கரண் ஓபராயின் நண்பர்கள் MEN TOO என்ற புதிய இயக்கத்தை தொடங்கியுள்ளனர். 

 

men too

 

MEE TOO மூலம் பெண்கள் தங்களுக்கு நிகழும் பாலியல் தொல்லைகளை தைரியமாக வெளி உலகில் சொல்ல வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால், இதைப்பயன்படுத்தி பல பெண்கள், ஆண்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். 
 

எனவே பாதிக்கப்படும் ஆண்களுக்கு ஆதரவாக MEN TOO என்ற புதிய இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் பொய்யான குற்றச்சாட்டு சுமத்தும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்தியாவில் தற்கொலை செய்து கொள்ளும் ஆண்களில் 51% பேர் பொய்யான பாலியல் புகார்களால் மன உளச்சலுக்கு ஆளானவர்கள் எனவும் கூறுகிறது.

 
பாலியல் புகாருக்கு ஆளாகும் ஆண்களின் பெயர் இறுதி தீர்ப்பு வரும்வரை வெளியிடக் கூடாது எனவும் வலியுறுத்துகிறது men too.

 

 

 

 

சார்ந்த செய்திகள்