Published on 18/10/2018 | Edited on 18/10/2018

உலகளவில் இலக்கியத்திற்கான உயரிய விருதான மேன் புக்கர், பெண் எழுத்தாளரான அன்னா பர்ன்ஸ்க்கு (46) வழங்கப்பட்டுள்ளது. இவர் வட அயர்லாந்தைச் சேர்ந்தவர். மேன் புக்கர் என்னும் இந்த உயரிய விருது 1969ஆம் ஆண்டு முதல் இலக்கிய எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அன்னா எழுதிய மில்க்மேன் என்னும் நாவலுக்காக இந்த வருடத்தின் மேன் புக்கர் விருது வழங்கப்பட்டுள்ளதாக விருது வழங்கும் மேன் க்ரூப் அறிவித்தது. மேலும் இந்த விருதுடன் ரூ.58.85 லட்சம் காசோலையும் வழங்கப்பட்டது.