Published on 26/04/2019 | Edited on 26/04/2019
இலங்கையில் ஈஸ்டர் திருநாளன்று நடைப்பெற்ற தீவிரவாத வெடிக்குண்டு தாக்குதலில் தொடர்புடையவராக கருதப்பட்ட முக்கிய நபர் உயிரிழந்ததாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
390 பேர் உயிரிழந்த இந்த தாக்குதலில் 500 க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதலில் தொடர்புடைய முக்கிய நபராக கருதப்பட்ட நேஷனல் தவ்ஹித் ஜமாத் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான ஜக்ரன் ஹசீம் இலங்கை அரசால் தேடப்பட்டு வந்தார். இந்நிலையில் ஹசீம் ஹோட்டல் ஒன்றில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்ததாக இலங்கை அதிபர் சிறிசேனா தற்போது உறுதி செய்துள்ளார்.