அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில், அமெரிக்காவின் அடுத்த அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால் இந்த தேர்தலின் வாக்குப்பதிவு குறித்தும், வாக்கு எண்ணிக்கை குறித்தும் குற்றஞ்சாட்டி வரும் ட்ரம்ப், அதிபர் தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்துவந்தார்.
இந்தநிலையில், சமீபத்தில் கூடிய அமெரிக்க நாடாளுமன்றம், ட்ரம்பின் ஆதரவாளர்களின் வன்முறைக்கு மத்தியில், ஜோ பைடனின் அதிபர் தேர்தல் வெற்றியை உறுதிசெய்தது. இதனைத் தொடர்ந்து வரும் 20 ஆம் தேதி, அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்க உள்ளார். ஏற்கனவே, வரும் 20 ஆம் தேதி முறையான அதிகார மாற்றம் நடைபெறும் எனத் தெரிவித்திருந்த ட்ரம்ப், தற்போது ஜோ பைடன் அதிபராகப் பதவியேற்கும் விழாவில் கலந்துகொள்ளப் போவதில்லை எனக் கூறியுள்ளார். இதுவரை அமெரிக்காவில் எந்த முன்னாள் அதிபரும், புதிய அதிபரின் பதவி ஏற்பு விழாவைப் புறக்கணித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரம்பின் இந்த முடிவு குறித்து ஜோ பைடன், "அவரும் நானும் ஒப்புக்கொண்ட சில விஷயங்களில் இதுவும் ஒன்று. அவர் வராதது ஒரு நல்ல விஷயம்" எனத் தெரிவித்துள்ளார்.