கடவுளிடம் கோரிக்கை வைப்பவர்கள், நன்கொடையாக ரூபாயோ, ஆபரணமோ கொடுப்பதை பார்த்திருப்போம். ஆனால், ஜப்பானிலுள்ள டோக்யோ நகரில் ஒரு கோவிலில் சாபம் விடுபதற்கு என வினோத நன்கொடை செலுத்தப்படுவது ஆச்சரியத்தை அளிக்கிறது. மற்றொருவருக்கு சாபம் விடுபதற்கு, அந்த கோவிலில் சென்று பெண்களின் உள்ளாடையை காணிக்கையாய் செலுத்தினால் போதுமாம். நம்முடிய சாபம் பலித்துவிடும் என்று அவ்வூர் மக்களால் நம்பப்படுகிறது.
யாருக்கு சாபம் விட வேண்டுமோ, அவருடைய புகைப்படத்தை அந்த உள்ளாடையில் ஒட்டி, மேலும் என்ன சாபம் என்பதை பார்ச்மென்ட் காகிதத்தில் எழுதி அந்த கோவிலில் கட்டினால் அது கண்டிப்பாக நடந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. ஒரு காலத்தில் யோகா ஆசிரியரை கண்டித்து அவரின் மாணவர்களால் இக்கோவிலில் இவ்வாறு உள்ளாடை கட்டப்பட்டது. பின்னர், உடனடியாக அந்த சாபம் பலித்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்த வழக்கம் அந்த பகுதிகளில் பரவியுள்ளது. இந்த கோவில் ’உள்ளாடை கோவில்’ என்றே பலரால் அறியப்படுகிறது.
மேலும், இந்த கோவிலில் எவ்வாறு, எதனால் இந்த வழக்கம் தொடங்கியது என்பது தெரியவில்லை. இந்த வழிபட்டுக்கு எந்த ஒரு வரலாற்று ஆவணமும் இதற்கு இல்லை. அந்த கோவிலுக்குள் நுழைந்தாலே அங்கு முழுவதும் பெண்களின் உள்ளாடைகளும் அதில் சபீக்கப்பட்டவர்களின் பெயருமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.