Skip to main content

"ஈரான் உள்நோக்கத்தோடு செய்யவில்லை" ஆஸ்திரேலிய பிரதமர் பேச்சு...

Published on 10/01/2020 | Edited on 10/01/2020

ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரான் விமான நிலையத்திலிருந்து 176 பேருடன் புறப்பட்ட உக்ரைன் நாட்டை சேர்ந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 176 பேரும் பலியாகினர்.

 

fdbg

 

 

புதன்கிழமை காலை டெஹ்ரான் விமான நிலையத்திலிருந்து விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணம் செய்த 176 பேரும் பலியானதாக தெரிவிக்கப்பட்டது.  இதில் கனடா நாட்டை சேர்ந்தவர்கள் 60 பேர். தொழில் நுட்ப காரணங்களால் விமானம் விபத்தில் சிக்கியதா? அல்லது தாக்கப்பட்டதா? என விசாரணை நடந்து வரும் நிலையில், ஈரான் படையினரே தவறுதலாக இந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியிருக்கிறது என அமெரிக்கா குற்றம்சாட்டியது. இந்நிலையில் இந்த விமானத்தின் கருப்பு பெட்டியை ஈரான் ஆராய்ச்சி செய்து வருகிறது.

இந்நிலையில் விமானத்தை தாக்கியது ஈரான் தான் என கனடாவும் கூறியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், "எங்கள் நாடு உட்பட பல்வேறு நாட்டு உளவுத்துறையிலிருந்து வந்த தகவல்களின்படி உக்ரைன் விமானத்தை ஈரான்தான் சுட்டு வீழ்த்தியுள்ளது என்பது தெரியவந்துள்ளது. ஆனால், ஈரான் இதனை உள்நோக்கத்தோடு செய்யவில்லை" என தெரிவித்துள்ளார்.  

 

 


 

சார்ந்த செய்திகள்