Published on 29/12/2018 | Edited on 29/12/2018

எகிப்து நாட்டில் கிசா பகுதியில் நேற்று இரவு சுற்றுலா பயணிகள் சென்ற வாகனத்தின் மீது நடந்த தீவிரவாத தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு இந்தியா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிசா பகுதியில் உள்ள பிரமிடை பார்க்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சென்றபோது, அவர்கள் சென்ற வாகனத்தின் மீது குண்டு வீசப்பட்டது. இந்த தாக்குதலில் வியட்நாமை சேர்ந்த 3 பயணிகள் மற்றும் எகிப்தை சேர்ந்த ஒருவர் என 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்த தீவிரவாத தாக்குதல் கண்டிக்கத்தக்கது. மேலும் இந்திய அரசானது எகிப்து அரசாங்கம் மற்றும் மக்களுக்கு எப்பொழுதும் துணை நிற்கும்' என கூறப்பட்டுள்ளது.