அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் மாகாணத்தில் இருந்து செயல்படும் யூ.எஸ்.ஐ.பி.சி. எனப்படும் அமெரிக்க- இந்திய வர்த்தக சபை கூட்டமைப்பு 'குளோபல் லீடர்ஷிப்' எனப்படும், இந்த விருதை 2007 ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது. வர்த்தக ரீதியிலான சிறப்பாக பங்காற்றும் இந்தியா மற்றும் அமெரிக்கா பெரு நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுக்கு ஆண்டுதோறும் 'குளோபல் லீடர்ஷிப்' விருது வழங்கப்பட்டு வருகிறது.
2019- ஆம் ஆண்டிற்க்கான விருதுக்கு கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான சுந்தர் பிச்சை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருடன் அமெரிக்க பங்குச்சந்தையின் நாஸ்டாக் அமைப்பின் தலைவரான அடேனா ஃப்ரைடா மேனும் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த வாரம் நடைபெறவுள்ள இந்த அமைப்பின் மாநாட்டின் போது விருதுகள் வழங்கப்படவுள்ளது.