சீனாவில் ஹவுன் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சில நாடுகளில் அந்த வைரஸ் தொற்றின் தாக்கம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை 40,000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1016 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சீனா அதிபர் கடந்த சில வாரங்களாக எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் அந்நாட்டு மக்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். வைரஸ் தாக்குதலுக்கு அஞ்சி அவர் ரகசிய இடத்தில் இருப்பதற்கு வாய்ப்புக்கள் அதிகம் என்று கூறப்படுகின்றது. 800க்கும் மேற்பட்ட மக்கள் சீனாவில் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில் இதுதொடர்பாக ஒரு அறிக்கை கூட அவர் ஏன் வெளியிடவில்லை என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. இவர் கடைசியாக மூன்று வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசியது குறிப்பிடத்தக்கது.