Skip to main content

கோடிகளில் ஏலம் போன மெக்காவின் அரிய முதல் புகைப்படம்...(புகைப்படம்)

Published on 18/05/2019 | Edited on 18/05/2019

இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்காவின் முதல் புகைப்படம் ஏலம் விடப்பட்டுள்ளது.

 

first photograph of makkah auctioned

 

 

பின்லாந்து நாட்டை சேர்ந்த புகைப்படக் கலைஞர் கிறிஸ்டியன் ஸ்னொக் ஹர்கிரன்ஜே என்பவர் மெக்காவைப் பற்றியும், 1884 ல் அங்கு அவர் சந்தித்த மக்களைப் பற்றியுமான தனது அனுபவத்தை 1889ம் ஆண்டில் புத்தகமாக எழுதினார். அந்தப் புத்தகத்திற்காக மெக்காவையும், அங்கு வாழ்ந்த சில மக்களையும் முதன்முதலில் அப்துல் கபார் என்பவர் புகைப்படம் எடுத்தார்.

அந்த அறிய புகைப்படம் தற்போது இந்தோனேஷியாவில் ஏலம் விடப்பட்டுள்ளது. அந்த புகைப்படம் இந்திய மதிப்பில் சுமார் 2 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனுடன் எடுக்கப்பட்ட மேலும் சில புகைப்படங்கள் நெதர்லாந்தில் உள்ள லைடென் பல்கலைக்கழக நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 


 

சார்ந்த செய்திகள்